Monday, 30 April 2018

ஹோட்டல் இட்லியில் ஒளிந்திருக்கும் பயங்கரம் -படியுங்கள் பகிருங்கள்

*ஹோட்டல் இட்லியில் ஒளிந்திருக்கும் பயங்கரம் -படியுங்கள் பகிருங்கள்*

சென்னையில் ஒரு உணவு விடுதி ஒன்றில் இட்லி சாப்பிடச் சென்றேன். சமையல் அறையில் இட்லி வேகவைப்பதை தற்செயலாக பார்க்க நேர்ந்தது.இட்லி வேகவைக்கும்தட்டில் பாலிதீன் பேப்பரை விரித்து அதன்மேல் இட்லிமாவைஇட்டு வேகவைக்கும்காட்சியைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

அந்த இட்லிகளை உணவுப் பரிசோதனைக்கு அனுபவித்தார் நண்பர் ஒருவர். புற்றுநோயைஉருவாக்கக் கூடியபாலித்தீன் துகள்கள் அந்த இட்லிகள் முழுவதும் பரவி இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது.
கடைக்காரரிடம் இதைச்சொல்லி தயவுசெய்து துணியைவிரித்து அதன்மேல் இட்லி வேகவைப்பதை செய்யுங்கள் என்று சொன்னோம்.

அதற்கு அவர் பதில்கூறினார்.தமிழ்நாடு முழுவதும் உள்ளபெரும்பாலான ஹோட்டல்களில்பாலித்தீன்பேப்பர்களின் மீதுதான் இட்லிகள்வேகவைக்கப்படுகின்றன.
இதுதான் எளிதாகவும் சவுகரியமாகவும் உள்ளது. துணிகளைப்பயன்படுத்தினால் இட்லிகளைப்பிரிப்பது சிரமமாக உள்ளது. வேளைப்பளுவும் கூடுகிறது.

கேன்சர் இட்லிகள் விற்பனையை எப்படித்தடுப்பது என யோசிக்கிறீர்களா?

முதலில் இது குறித்த விழிப்புணர்வை வாட்ஸப் மூலமாகவே பரவலாக்குவோம்.

மக்கள் நலன் கருதி இதை உடனே அதிகமாக பகிருங்கள்.

Sunday, 22 April 2018

பொறுமை இல்லாததால் தனது வாழ்க்கையை துறக்கிறான்.

எலி சாதாரணமாக இருக்கும்போது மரத்தால் ஆன பொருட்களை ஓட்டை போட்டு நாசம் செய்யும்.

அதே எலி அதற்கென வைக்கப்பட்ட மரப்பொறியில் சிக்கிக் கொண்டால், எப்படி தப்பிக்கலாம் என பயத்தில் அங்கும் இங்கும் அலையுமே தவிர, மற்ற மரப்பொருட்களை ஓட்டை போட்டது போல, இம்மரப் பொறியையும் ஓட்டை போட்டு வெளியில் சென்று விடலாம் என யோசிக்கவே யோசிக்காது.

ஆமாம், இப்படி யோசித்தால், அதிகபட்சம் ஐந்து நிமிடத்தில் பொறியையே ஓட்டை போட்டு வெளியேறி விடும். ஆனால், மரப்பொறியில் சிக்கிய எலியை நீங்கள் ஐந்து நாட்கள் அப்படியே வைத்திருந்தாலும், அது தன்னால் வெளிவர முடியாத ஏதோவொரு பொறியில் அடைத்து வைத்து விட்டது போன்றே அங்கும் இங்கும் அலைபாயும்.

நம்மை யாரும் காப்பாற்ற மாட்டார்களா என ஏக்கத்தோடு பார்க்கும்.

அதற்கே உயிர் பிழைக்க வழி தெரிந்தாலும்  அந்த பதட்டத்தில் அதனது மூளை வேலை செய்யாது.

மனிதனும் பல நேரத்தில் இப்படித்தான் பல பிரச்சினைகளிலிருந்து வெளியே வர தெரிந்தும் பொறுமை இல்லாததால் தனது வாழ்க்கையை துறக்கிறான்.

புரிந்தால்  சரி.படித்ததில் பிடித்தது