Saturday, 23 December 2017

Motivation: power of money, how to become millionar

*Extremely interesting & Must Read*

*POWER OF MONEY*

By Adam Khoo ( Singapore 's youngest millionaire at 26 yrs.)

Some of you may already know that I travel around the region pretty frequently, having to visit and conduct seminars at my offices in Malaysia , Indonesia , Thailand and Suzhou ( China ) . I am in the airport almost every other week so I get to bump into many people who have attended my seminars or have read my books.

Recently, someone came up to me on a plane to KL and looked rather shocked. He asked, 'How come a millionaire like you is traveling economy?' My reply was, 'That's why I am a millionaire. ' He still looked pretty confused.

This again confirms that greatest lie ever told about wealth (which I wrote about in my latest book 'Secrets of Self-Made Millionaires'). Many people have been brainwashed to think that millionaires have to wear Gucci, Hugo Boss, Rolex, and sit on first class in air travel. This is why so many people never become rich because the moment they earn more money, they think that it is only natural that they spend more, putting them back to square one.

The truth is that most self-made millionaires are frugal and only spend on what is necessary and of value. That is why they are able to accumulate and multiply their wealth so much faster.

Over the last 7 years, I have saved about 80% of my income while today I save only about 60% (because I have my wife, mother in law, 2 maids, 2 kids, etc. to support). Still, it is way above most people who save 10% of their income (if they are lucky).

I refuse to buy a first class ticket or to buy a $300 shirt because I think that it is a complete waste of money. However, I happily pay $1,300 to send my 2-year old daughter to Julia Gabriel Speech and Drama without thinking twice.

When I joined the YEO (Young Entrepreneur's Orgn) a few years back (YEO is an exclusive club open to those who are under 40 and make over $1m a year in their own business), I discovered that those who were self-made thought like me. Many of them with net worth well over $5 m, travelled economy class and some even drove Toyotas and Nissans, not Audis, Mercs, BMWs..

I noticed that it was only those who never had to work hard to build their own wealth (there were also a few ministers' and tycoons' sons in the club) who spent like there was no tomorrow. Somehow, *when you did not have to build everything from scratch, you do not really value money. This is precisely the reason why a family's wealth (no matter how much) rarely lasts past the third generation*

Thank God my rich dad foresaw this terrible possibility and refused to give me a cent to start my business.

Then some people ask me, 'What is the point in making so much money if you don't enjoy it?' The thing is that I don't really find happiness in buying branded clothes, jewellery or sitting first class. Even if buying something makes me happy it is only for a while, it does not last.

^Material happiness never lasts, it just gives you a quick fix*. After a while you feel lousy again and have to buy the next thing which you think will make you happy. I always think that if you need material things to make you happy, then you live a pretty sad and unfulfilled life..

Instead, *what makes me happy is*
when I see my children laughing and playing and learning so fast.
What makes me happy is when I see my companies and trainers reaching more and more people every year in so many more countries.

What makes me really happy is when I read all the emails about how my books and seminars have touched and inspired someone's life.

What makes me really happy is reading all your wonderful posts about how this blog is inspiring you. *This happiness makes me feel really good for a long time, much much more than what a Rolex would do for me.*

I think the point I want to put across is that *happiness must come from doing your life's work (be it teaching, building homes, designing, trading, winning tournaments etc.)*and the money that comes is only a by-product.

*Save this message to read it from time to time*

THE POWER OF MONEY

VERY DOWN TO EARTH
VERY PRACTICAL

Wednesday, 13 December 2017

God : hindu religion perumai

.          இஸ்லாம், கிறிஸ்தவம் இரண்டு மதங்களுமே சென்ற இடங்களில் எல்லாம் வெற்றிக் கொடி நாட்டி அந்த மண்ணை தனது ஆளுகையின் கீழ் கொண்டு வந்தது.

       ஆனால் ஐநூறு வருடவ்களுக்கு மேலாக இந்திய மண்ணை ஆண்டாளும் கூட இங்கு குறிப்பாக தமிழகத்தில் ஐந்து சதவிகிதத்திற்கு கூட மக்களை மதம் மாற்ற முடியவில்லை.

      இதற்கு காரணமாக பலவிதமாக காரணங்களை சொல்லலாம். ஆனால் இதன் பின் இருக்கும் ஒரு உண்மை நம்மை பெருமிதம் கொள்ள வைக்கும் ஒன்றாகும்.

      நமது முன்னோர்கள் எதையும் காரண காரியம் இன்றி சடங்கு, சம்பிரதாயங்களை உருவாக்கி வைக்கவில்லை. அவர்களின் தீர்க்க தரிசனம், தொலை நோக்கு பார்வையுடன் நமக்கு கொடுத்த மரபுகள் தான் இந்து மதத்தை தமிழ் மண்ணில் தாங்கி பிடித்து வருகின்றன.

         ஆயிரம் தெய்வங்களை வழிபடக்கூடியவர்கள் என்று இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் நம்மை ஏளனப்படுத்தலாம். முனியாண்டிக்கும், ஐயனாருக்கும் விளக்கம் கேட்டு நம்மை கேலி செய்யலாம். ஆனால் உண்மையை சொல்லப்போனால் இந்த முனீஸ்வரர், அய்யனார், முப்பாத்தம்மன் தான் இன்றைக்கும் பில்லாஹ்வையும், ஏசப்பாவையும் நம்மிடம் மண்டி போட வைக்கின்றது.

          நம் தேசத்தின் மீது படையெடுத்தது வந்து நம்மை அடிமைப்படுத்தியவர்கள் நமது வழிபாடு, உணவு, குருகுல கல்வி என அனைத்தையும் அழித்தால் மதத்தை பரப்பலாம் என திட்டமிட்டு படிப்படியாக ஒவ்வொன்றாக அழித்தனர். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றனர்.

        ஆனால் அவர்கள் அழிக்கவோ, தொடவோ முடியாதது நமது சிறு தெய்வ வழிபாடு. நமது முன்னோர்பள் நமது பாரம்பழியங்களை இந்த சிறு தெய்வ வழிபாட்டில் தான் தீர்க்கதரிசனத்துடன் இந்து மத மரபுகளை தனிமனித கடமைகளாக நமக்கு வைத்துள்ளனர். இந்த கடமைகளை எந்த கொம்பனாலும் இதுவரை அசைக்கவோ, மாற்றவோ முடியவில்லை. இனிமேலும் அது நடக்காது.

         இந்து மதம் ஒரு ஆலமரம். அதன் விழுதுகள் ஆறு பிரிவுகள்.

1. சைவம் - சிவனை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்
2. வைணவம் - திருமாலை முழுமதற்கடவுளாக வழிபடும் சமயம.
3. சாக்தம் - உமையை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்
4. காணாபத்தியம் - கணபதியை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்.
5. கௌமாரம் - முருகனை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்.
6. சௌரம் - சூரியனை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்.

           இந்த ஆறு விழுதுகளின் சல்லி வேர்கள் தான் சிறு தெய்வ வழிபாடு.

          சிறுதெய்வ வழிபாடு ஒவ்வொரு இந்துவின் ரத்த நாளங்களிலும் கலந்துருப்பது. இதைத்தான் குல தெய்வ வழிபாட்டில் நமது முன்னோர் வைத்துள்ளனர்.

             ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு குல தெய்வம் உண்டு. குல தெய்வம் இல்லாத இந்து கிடையாது.

      இந்த குல தெய்வம் என்பது மேற்கண்ட ஆறு  இந்து தெய்வங்களின் அம்சமாகவே அமைத்து வழிபடுகின்றனர்.  உதாரணமாக முனீஸ்வரர் சிவனின் அம்சம், அய்யனார் விஷ்ணுவின் அம்சம், முப்பாத்தம்மன்  உமையின் அம்சம்.

       இந்துக்கள் குல தெய்வங்களான சிறு தெய்வங்கள் அனைத்துமே மேற்கண்ட ஆறு தெய்வங்களையே பிரதிபலிக்கும்.

        முன்னோர்கள் நமக்கு வெறும் கல்லுக்கு மாலை போட்டு வழிபடுவதை மட்டும் நமக்கு சொல்லி விட்டு போகவில்லை. அந்த தெய்வ வழிபாட்டிற்கு பல பாரம்பரிய பழக்கங்களையும், விதிகளையும் நமக்கு கடமைகளாக வகுத்து வைத்துள்ளார்கள்.  அதில் நமது உறவுகளையும் பிணைத்து வைத்துள்ளார்கள்.

              உறவுகளை பிணைத்ததோடு மட்டுமல்லாமல் நமது கௌரவம், புகழ், தனித்தன்மை, நமது அடையாளம், நமது வம்சத்தின் பாரம்பரியம் என அனைத்தையும் பாதுகாப்பதற்கான சடங்கு சம்பிரதாயங்களை அதில் ஏற்படுத்தி வைத்துள்ளனர்.

           ஒவ்வொரு இந்து குடும்பத்திற்கும் இந்த உலகத்தின் ஏதாவது ஒரு மூலையில் அவர்களது குல தெய்வம் கோவில் கண்டிப்பாக இருக்கும். காடு, மலை, வயல் என ஏதாவது ஒரு ஆள்நடமாட்டமில்லாத வனாந்திரத்திலாவது முன்னோர்கள் இருபது தலைமுறைகளுக்கு முன்பாக உருவாக்கி வைத்திருப்பார்கள்.

               இருபது தலைமுறைகளுக்கு முன்பாக ஒரே குடும்பமாக இருந்த நான்கு அண்ணன் தம்பிகள் கட்டிய கோவிலாக இருக்கும். அவர்களின் வழி வந்தவர்கள் இப்போது  உலகம் முழுக்க பரவி ஐநூறு குடும்பங்களாக பெருகியிருப்பார்கள்.

           ஆதிகாலத்தில் கோவிலை கட்டிய போது வருடம் ஒரு முறை அனைவரும் எப்படி கூடி வணங்கினார்களோ அதே போல இன்று வரை அது தொடரும். சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, ஆடி அமாவாசை என வருடத்தின் ஏதாவது ஒரு நாளில் அனைத்து குடும்பங்களும்  சேர்ந்து வருடா வருடம் வழிபடுவது அவர்களின் சாசனம்.  இது அவர்களின் அடையாளம், பிறப்புரிமை.

            இது ஒவ்வொரு குடும்பத்தின் அடுத்த தலைமுறையை கட்டமைப்பதற்கான அங்கீகாரம். ஒருவன் தனது மகன்,  மகளுக்கு பெண் எடுக்கவோ அல்லது பெண் கொடுக்கவோ வேண்டுமானால் அவனது சாதி மட்டுமல்ல அவன் கும்பிடும் அந்த குலதெய்வ கோவிலும் முக்கியம். தனது குலதெய்வத்தை அவன் அடையாளமாக காட்டித்தான் தனது சொந்த சாதியிலேயே சம்பந்தம் பேச முடியும்.

       ஒரு பெண் பிறந்து திருமணம் ஆகும் வரை பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்க்குவாள். அவள் திருமணமாகிய பின் கணவரது வீட்டு குலதெய்வத்தை ஏற்றுக்கொள்வாள். இங்கேயும் நமது முன்னோர்கள் பலமான பிணைப்பை ஏற்படுத்தி வைத்துள்ளனர்.

       ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுப்பதோடு பிறந்த வீட்டு கடமை முடிவதில்லை.  அந்த பெண்ணின் பிறந்த வீட்டு குல தெய்வ வழிபாடுகளில் அவளின் ஆயுள் முடியும் வரை சிறப்பான மரியாதையும், முன்னுரிமையும் கொடுக்க வேண்டியது உடன் பிறந்த சகோதர்ர்களின் கடமை.

      குலதெய்வ கோயில்களில் நடைபெறும் திருவிழா, கிடாவெட்டு, கும்பாபிசேகம், என அனைத்திலும் திருமணம் செய்து கொடுத்த சகோதரிகளை குடும்பத்துடன் அழைத்து, புத்தாடைகள் கொடுத்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வைப்பது ஆண்களின் கடமை.

          நமது முன்னோர்கள் குலதெய்வங்களை வழிபடுவதோடு குடும்ப உறவுகளையும் அதில் செழிக்க வைத்துள்ளனர்.

      ஒரு பெண்ணிற்கு குழந்தை பிறந்தால் மொட்டையடித்து காது குத்துதல் அவரவர் குலதெய்வ கோவில்களில் வைப்பது மரபு. இதை கூட வெறுமனே பெற்றவர்கள் செய்து விட முடியாது. தாய்மாமனை அழைத்து அவர் மடியில் குழந்தையை அமர்த்தி செய்வார்கள்.

        சரியாக சொன்னால் பில்லாஹ்வையும், ஏசப்பாவையும் தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க செய்தது நமது குல தெய்வங்களான சிறு தெய்வ வழிபாடு மட்டுமல்ல நமது தாய்மாமன்களும் தான்.

        பெண் கேட்டு சென்றாலே தாய்மாமன் அனுமதியை முதலில் கேட்க வேண்டும் என்ற சம்பிரதாயம் இன்றும் பல சமூகங்களில் உள்ளது.

        அது மட்டுமல்ல சகோதரிகளின் முக்கியத்துவத்தை திருமணங்களிலும் நமது முன்னோர் வைத்துள்ளனர். தாலிக்கு மூன்று முடிச்சு தான். இது வரை எந்த ஆணாவது  மூன்று முடிச்சு போட்டதுண்டா...? மூன்றாவது முடிச்சுக்கு உரிமையாளராக சகோதரிகளை நமது முன்னோர் வைத்துள்ளனர்.

          ஒரு பெண் பருவமடைந்ததும் அவளுக்கான சடங்கு சம்பிரதாயங்களை முழுக்க முழுக்க செய்ய வேண்டிய கடமை தாய்மாமனுக்கு தான். அங்கே தகப்பன் இரண்டாவது இடம் தான். முதல் மரியாதை தாய் மாமனுக்குத்தான்.

      ஒரு பெண் பிறந்ததிலிருந்து அவள் திருமணமாகும் வரை அவள் மீதுள்ள அக்கறை, அதிகாரத்தை தகப்பனுக்கு சமமாக நமது முன்னோர் தாய்மாமனுக்கு வழங்கியுள்ளனர்.

          ஒரு வீட்டில் தனது மகனுக்கு பெண் பார்க்கும் பெற்றோர் முக்கியமாக தாய் தன் பிறந்த வீட்டிலிருந்து பெண் வரவேண்டுமென முன்னுரிமை கொடுக்கிறாள். பெண் இல்லா விட்டால் தனது பிறந்த வீட்டு கோவிலை குலதெய்வமாக கொண்ட பெண்ணை தேடுகிறாள். இதில் எது நிகழ்ந்தாலும் அந்த பிறந்த வீட்டு குல தெய்வத்தின் தொடர்பு அவள் விரும்பியபடி தொடர்ந்து கொண்டிருக்கும்.

            கடைசியாக செத்தால் கூட பிறந்த வீட்டு மரியாதையோடு போகத்தான் ஒவ்வொரு இந்து பெண்ணும் விரும்புவாள். அவளின் உடலை அடக்கம் செய்ய இறுதி யாத்திரையில் அமர வைக்க அவள் பிறந்த வீட்டு சேலை தான் உடுத்துவார்கள்.  ஒரு வேளை உடன் பிறந்த சகோதரன் இல்லா விட்டால் அவளின் பிறந்த வீட்டு குல தெய்வத்தை கும்பிடுபவர் யாராவது சகோதரன் ஸ்தானத்தில் இருந்து இறுதி ஊர்வலத்திற்கான சேலையும், மாலையும் அணிவிப்பார். இதுவும் நமது முன்னோர் நமக்கு கொடுத்த சம்பிரதாயம் தான்.

        இதை இவ்வளவு விரிவாக சொல்ல காரணம் உள்ளது. இந்த சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாமே நமது முன்னோர்கள் நமக்காக ஏற்படுத்தி பரம்பரை பரம்பரையாக நமது ரத்தத்தில் கலந்த்து. இதை மாற்றவும் முடியாது.

         ஏனெனில் பிற மதத்தில் மனிதர்கள் மிருகங்களை போல வாழ்ந்த காலத்திலேயே நமது முன்னோர்கள் மனித உறவுகளின் மேன்மையையும், அதன் பரிசுத்தத்தையும் நமது இறை வழிபாட்டுடன் கலந்து உயர்வான இடத்திற்கு வந்து விட்டனர்.

         இந்த பதிவு பலருக்கும் மிகைப்படுத்தலாக கூட தோன்றலாம். ஆனால் நிதர்சனம் இதுதான்.

            சொந்த வீடு இருக்காது, கூரை வீட்டில் இருந்தாலும் மழை பெய்தால் இத்துப்போன கூரைகளோடும், இடிந்து விழும் அளவிற்கு மோசமான மண் சுவர் கொண்ட குடிசையில் வாழும் ஒருவனுக்கு குடிக்க கஞ்சி இல்லாமல் பட்டிணியாக கூட கிடப்பான். ஆனால் தாய்மாமன் சீர் செய்ய கிட்னியை விற்றாவது லட்சக்கணக்கில் செலவு செய்வான்.

         உடன் பிறந்த பெண்களுக்கு உரிய கடமையை செய்தால் தான் நமது சமூகம் அவனை ஆணாகவே ஒப்புக் கொள்ளும். அது மட்டுமல்ல அவனது குலதெய்வ கோவிலில் அப்போது தான் அவனுக்கு உரிய மரியாதை கிடைக்கும். அதனால் எப்பாடு  பட்டாவது அவன் தனது கடமையை செய்கிறான்.

       ஒரு குடும்பம் மதம் மாற வேண்டுமெனில் முதலில் குடும்பத்து பெண்களின் ஆதரவு இருக்க வேண்டும். நமது இந்து மதத்தில் தனக்கு இவ்வளவு முக்கியத்துவம் தரும், பெருமைப்படுத்தும் உறவுகளை விட்டு அவள் எப்படி வெளியேற சம்மதிப்பாள்....? கணவனுக்காக தனது சகோதரர்களை அவள் எப்படி புறக்கணிக்க முடியும்.

          தமிழ் சமூகத்தில் ஆணின் சிறப்பே உடன்பிறந்த சகோதரிகளை கடைசி வரை கைவிடாமல் உறவை பேணுவது. தனக்கு சமூகத்தில் மரியாதையையும், அந்தஸ்தையும் வழங்கும் தாய் மாமன் உறவை புறம் தள்ளி அவன் எப்படி மதம் மாறுவான்...?           

         இதெல்லாம் நமது இந்து சமூகத்திற்கு ரத்தத்தில் ஊறியது. சிறு தெய்வ வழிபாடு என்பது சினிமாவில் காட்டுவது போல ஒரு கல்லை நட்டு, அதற்கு மாலை போட்டு சூடம் பத்தி காட்டும் காமெடி அல்ல. நமது பாரம்பரியத்தின் அடி விழுதுகள். நமக்கு உணர்வு பூர்வமானது. உண்ணும் உணவில் உப்பு போட்டு சாப்பிடுபவன் செய்யக்கூடியது.

              இவ்வளவு பாரம்பரியமும், பெருமையும் கொண்ட இந்த மண்ணில் அப்பன் யாரென்றே தெரியாதவனையும், சகோதரிகளையே மணந்து கொள்ளலாம் என்பவனையும் தூக்கிக்கொண்டு வந்து வியாபாரம் செய்ய வந்து விட்டார்கள்.

           எவன் ஏற்பான்...? வாளுக்கு  அஞ்சியவன் நான்கு சதவிகிதம், கஞ்சிக்கு செத்து ரொட்டிக்கு ஆசைப்பட்டவன் மூன்று சதவிகிதம். அவ்வளவு தான்.  இன்னும் ஆயிரம் வருடங்கள் ஊளையிட்டாலும் மேற்கொண்டு போனியாகாது.

        ஏசப்பாவும், அல்லாஹ்வும் நம்மூர் சிறு தெய்வங்களான முனீஸ்வரன், அய்யனார் மற்றும்  முப்பாத்தம்மனிடம் எப்போதோ மரண அடி வாங்கி தோற்று போய் விட்டனர்.

வெளியீடு : தி.நகர் மன்னர்

Tuesday, 12 December 2017

Health: kothumai( கோதுமையின்) theemaik (Bad of wheat).

உயிர் பலி வாங்கும் கோதுமையின் தீமைகள்...

88 அந்தந்த நாடுகளின், அந்தந்த சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற உணவை, அந்தந்த நாடுகளில் வாழும் மக்கள் உண்டு வந்தால் மட்டுமே ஆரோக்கியமான வாழ்க்கை சாத்தியம்.

அமெரிக்காவின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற ஓர் உணவை, இந்தியாவில் சாப்பிட்டால் அது என்ன மாதிரியான விளைவைத் தரும் என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் புரியும்.

இன்னும் எளிமையாக சொன்னால் ஆற்று நீரில் வாழும் மீன், கடல் நீரில் செத்துப் போய் விடும். கடல் நீரில் வாழும் மீனை ஆற்றில் கொண்டு வந்து விட்டால் அதனால் வாழ முடியாது. உணவின், ஆரோக்கியத்தின் அடிப்படை இந்தத் தத்துவம்தான்.

ஆனால் விளம்பர மாயைகளுக்கும், மோசடியான உணவு அரசியலுக்கும் நாம் பலியாகி விட்டோம் என்பதற்கு எண்ணற்ற உதாரணங்கள் உண்டு. நம் தேங்காய் ஆபத்து,நம் நிலக் கடலை ஆபத்து, நம் பாரம்பரிய அரிசியால் ஆபத்து என்று இந்திய மண்ணில் விளையும் எல்லா உணவு வகைகளையும் ஆரோக்கியக் கேடு என்று நம்ப வைத்து ஓட்ஸையும், ரீஃபைண்ட் எண்ணெய்களையும் நம் தலையில் கட்டி விட்டார்கள்.

அதே போன்றதொரு மோசடிதான் இந்த சப்பாத்தி மோசடியும். இது தமிழர்களைக் குறி வைத்த வட இந்திய அரசியல் என்று உள்ளூர் லெவலில் புரிந்து கொள்ளலாம்.

வில்லியம் டேவிஸ் என்ற அமெரிக்க இதய நோய் நிபுணர் ஆரோக்கிய விழிப்புணர்வு தரும் எண்ணற்ற புத்தகங்களை எழுதியவர். இவர் எழுதிய ‘Wheat Belly’ என்ற புத்தகம் பரபரப்பாக பேசப்பட்டு, விற்பனையில் புதிய உச்சத்தை சமீபத்தில் எட்டிப் பிடித்திருக்கிறது.
கோதுமை ஒரு விஷம் என்பதுதான் இந்த புத்தகத்தின் சாராம்சம்.

‘‘இதய நோய்களுக்கு ஆஞ்சியோப்ளாஸ்டி அறுவை சிகிச்சைகளை செய்து வருபவன் நான். என்னிடம் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் படும் துயரங்களைப் பார்த்து மிகுந்த வேதனைப் பட்டிருக்கிறேன். ஆஞ்சியோப்ளாஸ்டி என்பது இதய நோய்க்காக செய்யும் ஒட்டு வேலைதான் என்பதை கொஞ்ச நாளிலேயே உணர்ந்து கொண்டேன். அதனால், இதற்கான மூலகாரணத்தைக் கண்டறிய வேண்டும் என்று முடிவு செய்தேன்.

முக்கியமாக, என்னுடைய அம்மாவே மாரடைப்பால் இறந்தது எனக்கு மிகப் பெரிய துக்கத்தைக் கொடுத்தது. அதனால், கடந்த 15 வருடங்களாக இதய நோய் சம்பந்தமான ஆராய்ச்சியிலேயே முழுவதுமாக என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். இத்தனை வருட ஆய்வின் பலனாக உருவானதுதான் நான் எழுதிய ‘Wheat belly’ எனும் புத்தகம்” என்று தன் புத்தகம் பற்றிக் கூறுகிறார் டேவிஸ். ‘நோய்களை உருவாக்குவதில் கோதுமையின் பங்கு முக்கியமானது என்பது தெரிந்து அதிர்ந்து போனேன்’ என்று டேவிஸ் கூறுவதுதான் இதில் ஹைலைட்.

‘‘நம்மில் பெரும்பான்மையோர் இன்று சந்திக்கும் முக்கிய நோய்களான நீரிழிவு, உடல் பருமன் மற்றும் இதய நோய்களுக்கு மூலகாரணமாக இருப்பது நம் உணவில் சேர்த்துக் கொள்ளும் கோதுமை,கோதுமையிலிருந்து தயாராகும் மைதா,ரவை .

நம் உணவிலிருந்து கோதுமையை நீக்கி விட்டால் நம் வாழ்க்கையே மாறி விடும். கோதுமை, உங்கள் ரத்த சர்க்கரை அளவை ஆச்சர்ப்படும் வகையில் அதிகரிக்கிறது. சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், உடல் எடை குறைக்கவும் கோதுமை பிரட் சாப்பிடலாம் என நினைக்கிறோம்.

உண்மையில் 2 ஸ்லைஸ் கோதுமை பிரட், ஒரு சாக்லேட் பாருக்கு இணையானது. கோதுமை சாப்பிடாத நோயாளிகளின் உடல் எடையில் ஒரு மாதத்துக்கு உள்ளாகவே மிகப்பெரிய வித்தியாசத்தைப் பார்க்க முடிந்தது.

என்னிடம் வரும் நீரிழிவு நோயாளிகளில் 80 சதவீதத்தினர் கோதுமை உணவை எடுத்துக் கொள்பவர்களாக இருந்தார்கள். அவர்களை கோதுமையைத் தவிர்க்கச் செய்து சோதித்ததில் 6 மாதங்களுக்குப் பிறகு அவர்களிடத்தில் ரத்த சர்க்கரை அளவு வெகுவாக குறைந்ததை உணர்ந்தனர். இதுமட்டுமல்ல, பல நோயாளிகள் தங்கள் கோதுமை அனுபவங்களையும் கூறியது கேட்டு வியந்துபோனேன். ‘கோதுமை சாப்பிடுவதை நிறுத்திய பின் என்னுடைய இன்ஹேலர்களை தூக்கி எறிந்து விட்டேன்’ என்று ஒரு ஆஸ்துமா நோயாளி கூறினார்.

‘15 வருடங்களாக மைக்ரேன் தலைவலிக்காக மருந்துகள் சாப்பிட்டுக்  கொண்டிருந்தேன். மூன்றே நாட்களில் வலி போய் விட்டது. மருந்துகளைநிறுத்திவிட்டேன்’ என்றார் ஒருவர்.

‘20 வருடங்களாக நெஞ்செரிச்சலால் அவதிப்பட்டேன். கோதுமையை நிறுத்திய பிறகு நிம்மதியாகத் தூங்குகிறேன்’ என்பது இன்னொருவரின் வாக்குமூலம்.

இதே போல கோதுமை உணவைத் தவிர்த்ததால் மூட்டு வலி, கொலஸ்ட்ரால் போன்ற நோய்களிலிருந்தும் தாங்கள் விடுபட்டதாக பல நோயாளிகள் என்னுடைய ஆய்வில் சொல்ல ஆரம்பித்தனர். ‘க்ளூட்டனைத் தவிர Gliadin, Amylopectin என உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பொருட்களும் கோதுமையில் இருக்கிறது. ‘Gluten Free’ என்று அச்சிடப்பட்டு பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்களில், அதற்கு பதிலாக சேர்க்கப்படும் பதப்படுத்திய சோள மாவு, அரிசி மாவு மற்றும் உருளைக்கிழங்கு மாவுகள் சர்க்கரை அளவை உயர்த்தக்கூடியவை. இந்தப்பொருட்களும் தவிர்க்கப்பட வேண்டியவையே’’ என்கிறார் வில்லியம் டேவிஸ்.

உணவியல் நிபுணர் லஷ்மியிடம் இந்த கோதுமை சர்ச்சை பற்றிக் கேட்டோம்...

‘‘கோதுமை பற்றிய பெரிய மாயையை உடைத்திருக்கிறது வில்லியம் டேவிஸின் ஆராய்ச்சி. இதில் யாருக்குப் பலன் இருக்கிறதோ இல்லையோ, தமிழர்களுக்கு நல்ல பாடம் இருக்கிறது. தென்னிந்தியாவின் சீதோஷ்ண நிலைக்கு, நம் மண்ணில் விளையும் பாரம்பரிய அரிசி உணவுகளே ஆரோக்கியமானவை என்பதை இதன் மூலம் அழுத்தமாகப் புரிந்துகொள்ளலாம். அரிசியில் பாலீஷ் செய்யப்பட்ட அரிசி வகைகளைத்தான் நாம் தவிர்க்க வேண்டும். அந்த வகையில் தீட்டப்படாத அரிசி உணவே மிகவும் சிறந்தது.

கோதுமையில் இருக்கும் ஒரே நல்ல விஷயம், அதன் நார்ச்சத்து காரணமாக சப்பாத்தியைக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே நம்மால் சாப்பிட முடியும் என்பதுதான்.

வட இந்தியர்கள் கோதுமையை பிரதான உணவாக எடுத்துக் கொள்கிறார்கள் என்பது அவர்களின் தட்பவெப்ப நிலையையும், மரபணுக்கள் அமைப்பையும் பொறுத்தது.

நாமும் அதைப் பின்பற்ற வேண்டியதில்லை.
நம்ப வேண்டியதும் இல்லை.

கொதுமையில் இருந்துதான் ரவை,மைதா,சேமியா தயாரிக்கப்படுகிறது என்பதையும் அறியுங்கள்.

நம் தேசத்திலேயே அதிகமாக கோதுமை விளையும் இடம் பஞ்சாப் மாநிலம். நம் தேசத்திலேயே அதகமாக கேன்சர் வரும் மாநிலம் பஞ்சாப். அதிக அளவில் இங்கு கேன்சர் பெருகி வருவதால் கேன்சர் சிகிச்சைக்கு ராஜஸ்தான் செல்ல "கேன்சர் எக்ஸ்பிரஸ் ரயில்" விடப்பட்டு உள்ளதை அறிந்து கொள்ளுங்கள்.

தற்போது உலகிலேயே கோதுமை அதிகமாக உற்பத்தி செய்யும் ஆஸ்திரேலியாதான் அதிக கேன்சர் நோயாளிகளை கொண்ட நாடுமாகும்.

எங்கெல்லாம் யூரியாவும்,ரசாயன மருந்தும் தெளிக்கப் படுகிறதோ அங்கெல்லாம் அலோபதி மருத்துவத்தை போலவே நோய் அதிகரிக்கும்.

நம்ம ஊர் ஐ.ஆர் வகை அரிசி, நயம் பொன்னி அரிசியை விட்டு என்று பாரம்பரிய அரசியை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களோ அன்றுதான் உங்கள் வாழ்வு நோய் அற்ற வாழ்வே குறைவற்ற செல்வமாக மாறும்.

பாரம்பரிய அரிசி உணவுடன் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றையும் ஆறு சுவைகள் உடன் சரி சம விகிதத்தில் எடுத்துக் கொண்டால் எந்த நோய் நொடிகளும் நம்மை அண்டவே அண்டாது!.

பாரம்பரிய கோதுமையில் இந்த தாக்கம் இல்லை.
ஆனால் இது பயிரிடப்படுவது இல்லை.

என்றும் உங்கள்
T.பாலசுப்ரமணிய ஆதித்தன்.

பலருக்கும் பகிருங்கள்.

இயன்ற வரை விலை அதிகமானாலும் சம்பா நாட்டு கோதுமை வாங்கி மெஷினில் கொடுத்து அரைத்து உபயோகியுங்கள்.

Saturday, 9 December 2017

God sivan: முக்தி தலங்கள்

முக்தி தலங்கள்
1. பிறந்தால் முக்தியளிக்கும் திருத்தலம்..
திருவாரூர்..
2.இறந்தால் முக்தியளிக்கும் திருத்தலம்..
வாரணாசி...(காசி).
3.நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலம்.. திருவண்ணாமலை.
4. தரிசிக்க முக்தியளிக்கும் திருத்தலம்..
தில்லை (சிதம்பரம்)
5. திருவிளையாடல்கள் சொல்ல முக்தியளிக்கும் திருத்தலம்..
திருஆலவாய் (மதுரை)
6. கேட்க முக்தியளிக்கும் திருத்தலம்..
அவிநாசி
7. தங்கினால் முக்தியளிக்கும் திருத்தலம்.. காஞ்சிபுரம்..
8. குளித்தால் முக்தியளிக்கும் திருத்தலம்.. வேதாரண்யம்..(திருமறைக்காடு)
மேற்கண்ட முக்தி தலவரிசையை நம்மில் பலர் அறிந்திருப்பார்கள்.
இவற்றில் காசியை தவிர மற்ற அனைத்தும் தென்னாட்டில் அமைந்துள்ளன.
இதனால் தான் தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
என்ற முழக்கம் உருவாயிற்று போலும்.
இறைவன் நடராஜபெருமான் அவதரித்த நட்சத்திரம் திருவாதிரை ஆகும்.
அதனால் அவருக்கு ஆதிரையான் என்ற பெயரும் உண்டு.
ஆருத்ரா தரிசனமும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் வருகிறது என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.
ஒவ்வொரு மாதமும் வரும் திருவாதிரை நாளில் திருவண்ணாமலை கிரிவலம் அல்லது தில்லையில் தரிசனம் செய்வது மிக்க நன்று.
இது எல்லோராலும் இயலாது. சிவனருள் பெற்றவர்களுக்கே இந்த வாய்ப்பு கிட்டுகிறது.
மனதில் உறுதி உடையவர்களுக்கும், பிறந்த ஜாதகத்தில் அல்லது எண்கணிதத்தில் அல்லது கைரேகையில் ராகுவின் பலம் உள்ளவர்களுக்குமே இந்த கிரிவலம் சாத்தியமாகிறது.
ஒவ்வொரு மாதமும் வரும் திருவாதிரை நாளில் மேற்கண்ட தலங்களில் ஏதாவது ஒன்றிற்கு சென்று இறைவனை வழிபட்டால் நமது கர்மவினைகள் அடியோடு அழிந்து மிகுந்த புண்ணியம் கிட்டும்.
ஒரு சிலரால் மட்டுமே இது சாத்தியம்.
அவ்வாறு செய்பவர்கள் மிகுந்த புண்ணியசாலிகள்.
மேற்கண்ட தலங்களுக்கு செல்ல இயலாவிடில் அதற்காக கவலை கொள்ள வேண்டாம்.
அருகில் உள்ள சிவதலத்திற்கு குடும்பத்துடன் சென்று சிவபெருமானுக்கு அபிஷேகம் ஆராதனைகள் பார்த்து மகிழ்ந்து  வரலாம்.
அர்ச்சனை செய்யலாம்.
அன்னதானம் செய்யலாம்.
திருக்கோவில்களில் நமசிவாய... சிவாயநம.. என்று மனதில் தியானித்திருப்போம்...

சிவசிவ......நமசிவாய