Velraj
Tuesday, 6 July 2021
தவறு யாரிடம் ?
Thursday, 6 August 2020
life: இவ்வளவு தான் வாழ்க்கையா
Monday, 27 July 2020
old is gold: 1955-1988 born generation golden memories of TamilNadu human being
Thursday, 30 January 2020
How to stay motivated ?
Tuesday, 24 September 2019
Gold: ஏமாற்றி பிழைப்பவரை ஏமாந்து வாழவைத்துக்கொண்டிருக்கும் ஏமாளிகளுக்கு சமர்பணம்
*ஏமாற்றி பிழைப்பவரை ஏமாந்து வாழவைத்துக்கொண்டிருக்கும் ஏமாளிகளுக்கு சமர்பணம்*
ஆண்டுக்கு ஒரு கடை எப்படி?
தங்கம் பற்றி விழிப்புணர்வு இல்லை மக்களுக்கு...! சில விளம்பரங்கள் சேதாரம் இத்தனை % என்றும், செய்கூலி இல்லை என்றும் கூறுகின்றது. உண்மை என்ன ?*
_____________________
💫 ஒரு பவுன் தங்கசெயினுக்கு
1.5 கிராம் செம்பு சேர்த்தால் தான் நகை செய்ய முடியும்...!
💫 இது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால்
8 கிராம் தங்கத்தில் 1.5 கிராம் கழித்தது போக
6.5 கிராம் தங்க நகை செய்யப்படுகின்றது...!
💫 ஆனால் சாமானியன் நகை வாங்கும்போது 6.5 கிராம் தங்கம் + 1.5 கிராம் செம்பு இரண்டும் சேர்ந்து 8 கிராம் தங்கமாக பில்லில் போடுகின்றார்கள். அதுமட்டுமின்றி அதற்கு மேலாக சேதாரம் என்று கூறி மேலும் 1.5 கிராம் செம்பை தங்கம் சேர்க்கப்பட்டதாக கூறி செம்பை தங்க விலைக்கு விற்கின்றார்கள்...!
💫 இதில் நான் சொல்வது என்ன 6.5 கிராம் தங்கம் + 1.5 கிராம் செம்பு (தங்கமாக) + சேதாரம் செம்பு 1.5 = 9.5 கிராம். ஆக 1 பவுன் நகை வாங்குபவர்கள் வெறும் 6.5 கிராம் தங்கத்தை மட்டும் இல்லாமல் 3 கிராம் செம்பையும் சேர்த்து விட்டுத் தான் தங்கத்தின் விலையை போட்டுவிடுகின்றார்கள்...!
💫 ஆக 1 பவுன் 8 கிராம் நகைக்கு 9.5 கிராமுக்கு நாம் பணம் கட்டுகின்றோம். யாரை ஏமாற்றுகின்றார்கள் நகைக் கடைகாரர்கள் ! ஏழைகளை ஏமாற்றி ஏழைகளின் இரத்தத்தை ஒட்டுண்ணிகளாக உறிஞ்சி எடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள்...!
💫 ஒருவர் ஒரு புதிய நகைக்கடை திறக்கின்றார் என்றால் ஒரு சில வருடத்தில் பல மாடிகளும் பல ப்ளாட்டுகளையும் வாங்கி குவிக்கின்றார்கள் என்றால் பணம் எப்படி வந்தது ? நான் மேலே சொன்ன கணக்குதான் உண்மை...!
💫 இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை என்ன ? பவுனுக்கு 3 கிராம் என்று வசூல் செய்யும் போது ஒரு கிராம் செம்பின் விலை என்ன ? கணக்கு போட்டு பாருங்கள்...!
1 கிராம் தங்கம் ரூ. 2922/-
8 கிராம் தங்கம் ரூ. 23,376/-
1 கிராம் செம்பு - 4.80
1.5 கிராம் செம்பு - 7.20 or 7/-
6.5 கிராம் தங்கம் - 18,993/-
6.5 கிராம் தங்கம் + 1.5 கிராம் செம்பு அடக்க விலை -18993+7=19000/-
1 பவுனுக்கு தங்கத்தில் லாபம் - 23376-19000= 4376/--
சேதாரம் 1.5 கிராம் = 4383/-
1 பவுனுக்கு மொத்த லாபம் 4376+4383=8759
💫 என்ன தலை சுத்துதா ? எனக்குள் ஒரு ஆதங்கம். ஆனால் இந்த விழிப்புணர்வை மக்கள் எப்போது உணர்கின்றார்களோ அன்று தங்கத்தின் விலை கண்டிப்பாக குறையும்...!
💫 நீங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசையுள்ள நல்ல உள்ளங்களே ! உங்கள் ஆதங்கத்தை காட்ட அதிகப்படி ஷேர் செய்யவும்.
எதுவும் மக்களால் முடியும்...!
இது ஏமாறுபவர்களுக்கும் ஏமாற்றுபவர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும்
ஏழைகள்
நடுத்தர வர்க்கத்தார்கள்
நல்லா இருந்துவிட்டுப் போகட்டுமே
உதவி செய்வோம்
ஷோர் செய்வோம் நன்றி🙏
Tuesday, 26 March 2019
Life: pencil thavarukaga rubber karaivathu
*இரப்பரைப் பார்த்து பென்சில் சொல்கிறது, " ஒவ்வொரு முறை நான் செய்யும் தவறுக்கும், என்னை சுத்தப்படுத்தி தூய்மையாக்கி விடுகிறாய், ஆனால் என்னை சுத்தம் செய்யும் போது நீ கரைந்துக் கொண்டே போகிறாயே, அது எனக்கு வருத்தமாக இருக்கிறது" என்று.*
*இரப்பர் அதற்கு " அது என் கடமை, நான் படைக்கப் பட்டதே அதற்குத் தான். என்னைக் கண்டு நீ வருந்த வேண்டாம். இதில் எனக்கு முழு மகிழ்ச்சி. என்னால் உன் தவறுகள் அழிக்கப்பட்டு, நீ திருத்தங்களுடன் முன்னேறி சென்றால் அதுவே என் வெற்றி. நான் கரைவதைப் பற்றி எனக்கு கவலை இல்லை" என்றது.*
*அந்த இரப்பர் வேறு யாருமில்லை.நம் பெற்றோர் தான். அவர்கள் ஆயுள் முடியும் வரை நம் தவறுகளை திருத்திக் கொண்டே இருப்பார்கள்....* .
*நம் மீது பொறாமை படாத இரு உள்ளங்கள் நம் பெற்றோர்கள்*🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Saturday, 23 February 2019
Health: own health checkup, master health checkup is fraud
மாஸ்டர் ஹெல்த் செக்கப்பின் திடுக்கிடும் இரகசியம்
நீங்கள் ஆரோக்கியமானவர் தான் என்பதை எப்படி உறுதி செய்வது?
ஒருவர் ஆரோக்கியமாக இருக்கின்றாரா?
இல்லையா?
எப்படி தெரிந்து கொள்வது?
*"மாஸ்டர் செக்கப்" செய்துகொள்வதுதான், இன்று பரவலாக நம்பப்படும் ஒரு முறை!*
பரிசோதனை செய்வது என்பது
"சொந்தக்காசில் சூனியம்" வைத்துக்கொள்வது போன்றது.
நோயில்லாமல் வாழ்க்கை நடத்திக்கொண்டிருப்பவரை,
"நீ நோயாளிதான்" என நம்ப வைத்து மருந்து மாத்திரை விற்கும் நிறுவனங்களுக்கு நிரந்தர வாடிக்கையாளாராக்கும்
"தந்திர வியாபார வலை" தான் பரிசோதனை செய்ய பரிந்துரைப்பது.
அல்லது,
"அப்படியிருக்கும், இப்படியிருக்கும்"
என பயமுறுத்தி பரிசோதனை செய்ய தூண்டுவது.
நம்மில் அநேகர் இதில் மாட்டிக்கொண்டு, இல்லாத நோய்க்கு மருத்துவம் செய்து, உள்ளபடியே நோயை வரவழைத்துக் கொண்டவர்கள்தான்.
இதில் மோசமாக பாதிக்கப்படுபவர்கள்
(most affected victims)
நன்கு படித்தவர்கள்(?),
பணம் படைத்தவர்கள்(double income),
புகழடைந்தவர்கள்.
எப்படி?
ஒவ்வொருவரின் உடலும் நாங்கள் சொல்வதுபோல்தான் இயங்கவேண்டும்.
*சர்க்கரை நோய் ரீடிங் 80/140,*
*இரத்த அழுத்த நோய் ரீடிங் 80/120,*
*சிறுநீரக நோய் ரீடிங் 1.02,*
*கொழுப்பு அளவு,*
*உப்பு அளவு*
*பொதுவாக இப்படி தான் இருக்க வேண்டும் என்று, WHO பரிந்துரையின்படி சில அளவுகளை நிர்ணயித்திருக்கிறது நவீன ஆங்கில மருத்துவம்.*
இதை நாமும் உண்மை என நம்பி, நோயாளிகளாக மாறிகொண்டிருக்கிறோம்.
*இத்தகைய "ரீடிங்குகள்" நவீன விஞ்ஞானத்தின் "நன்கொடைகள்".*
*Our Body mechanism is beyond சயின்ஸ்.*
நம் உடல் இயற்கை விதிகளின்படி இயங்குகிறது.
ஒவ்வொருவரின் உடலியக்கமும் ஒவ்வொருமாதிரி இயங்குகிறது.
*உலகில் எந்த இருவரின் உடலியக்கமும் ஒன்றுபோல் இருக்காது*
*யாருக்கும் கைரேகை ஒன்று போலிருக்காது*
உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும்,
*வெவ்வேறு தட்ப வெப்ப நிலை* ,
*வெவ்வேறு உணவு பழக்கம்*,
*வெவ்வேறு உணவு உண்ணும் முறை*,
*வெவ்வேறு கலாச்சாரம்*,
*வெவ்வேறு ஜீன் கட்டமைப்பு* இருக்கின்றன!
*இது உண்மையானால் ஒவ்வொரு மனிதனின் உடலியக்கமும் தனித்தன்மையுடையதாகத்தானே (unique) இருக்கும்*.
அப்படியானால் எந்த இருவரின் உடலியக்கமும் ஒன்றுபோல் இயங்காது.
அப்படியானால், *"உலகில் பல மூலைகளிலிருக்கும் எல்லோருக்கும் ஒரே ரீடிங் இருக்கவேண்டும்",*
*என்று ஆங்கில மருத்துவ உலகம், "அடம் பிடிப்பது" எப்பேற்பட்ட "முட்டாள் தனம்". இதை சரியென்று ஏற்றுக்கொண்டு, அதற்குத்தக்கப்படி உடலியக்கத்தை மாற்றுவது எவ்வளவு பெரிய "அறியாமை".*
எனவே இந்தபரிந்துரைகளை கட்டவிழ்த்துவிடும்
*"Master check-up"*
என்பது இந்த நூற்றாண்டின்
*"மாபெரும் ஆங்கில மருத்துவத்தின் வணிக மோசடி".*
அப்படியானால்,
ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருப்பது, இல்லாதது,
எப்படி தெரிந்துக் கொள்வது?
வரும் முன் காப்பது எப்படி?
இந்நிலை உங்களுக்கு இருக்கிறதா?
என உறுதி செய்துகொள்ளுங்கள்.
*1. தரமான பசி.*
*2. தரமான தாகம்.*
*3. தரமான தூக்கம்.*
*"தரம்"* என்ன என்ற பதிலில் ஒவ்வொருவாருக்கும் ஒவ்வொரு புரிதல் இருக்கும். எனவே மேற்சொன்ன பசி, தாகம், தூக்கம் இவற்றில் திருப்தியாக இருந்தால், "நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள்" என உறுதி செய்து கொள்ளலாம்.
*படித்தில் உணர்ந்தது*
*சிந்திப்பவர் மட்டுமே.....*
*அனைத்து (நோய்) துன்பங்களில் இருந்தும்,* *அறியாமையில் இருந்தும்,*
*விடுதலை பெறுவர் ... !!!*