Sunday, 20 May 2018

பாலகுமாரனின் மறையாத வைர வரிகள்.

மறைந்த எழுத்துச்சித்தர்
       பாலகுமாரனின்
              மறையாத  வைர வரிகள்.
........................................................
எல்லோரும்  என்னைக்  கேலி செய்கிறார்கள்  என்று  வருத்தப்பட்டு எழுதிய  இளைஞர்  ஒருவருக்கு,  பாலகுமாரன்  அவர்கள்  வழங்கிய அற்புதமான  அறிவுரை.

1. புத்தகங்களை துணை கொள்.

2. உடலுழைப்பை அதிகரி.

3. சமூகம் புறக்கணித்தவற்றை கைவிடு.

4. குளிர் நீரில் குளி.

5. கொஞ்சமாய் சாப்பிடு.

6. தியானம் கைகொள்.

7. இரவு உறங்கும் முன் நெடுந்தொலைவு     
     நட.

8. உடுப்பில் வெள்ளை நிறத்தைப்
     பழக்கமாக்கு.

9. உணவில் கீரை சேர்த்துக் கொள்.

10. எத்தனை வலித்தாலும் அழாதே, சிரி.

11. ஆத்திரம் அகற்று.

12. கேலிக்கு புன்னகை தா.

13. கோபத்திற்கு மௌனத்தைக் கொடு.

14. நட்புக்கு நட்பு செய்.

15. வேலை சொல்லித் தருபவரிடம் மிகப்
       பணிவாக இரு.

16. அலட்சியப் படுத்தினால் விலகி நில்.

17. அன்பு செய்தால் நன்றி சொல்.

18. இதமாகப் பேசு.

       நீ ஜெயிப்பாய். இது நிச்சயம் ! ! !

       வாழ்க்கையில்  நீ உன்னத நிலைக்கு
       வருவாய். இது சத்தியம்.

Monday, 14 May 2018

நல்லதையே தனியாக செய்பவன் தண்டிக்கப்படுகிறான்

xlent article.,"

இரண்டு ரயில் தண்டவாளங்கள் அருகருகே இருக்கின்றன..

ஒன்றில் எப்பவுமே ரயில் வராது....

மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும்...

ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை
விளையாடிக் கொண்டிருக்கிறது.

ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறது.

அத்தருணத்தில் ரயில் வருகிறது....

தூரத்தில் இதனை நீங்கள் பார்க்கிறீர்கள்.....

உங்களுக்கு அருகே ட்ராக் மாற்றும் கருவி இருக்கிறது....

நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள்....?

இப்படி ஒரு கேள்வியை நேற்று ஒரு விழாவில் ஒருவர் கேட்டார்...
ப்ராக்டிகலாக பதில் சொல்லனும்.. நாம் யாரும் சூப்பர் மேன் இல்லையென்றும் சொன்னார்.....

உண்மையாக நாம் என்ன செய்வோம்...?

ஒரு குழந்தை விளையாடு்ம் இடத்திற்கு தானே ட்ராக்கை மாற்றி விடுவோம்..

ஏனெனில் 10 குழந்தைகள் காப்பாற்றப்படுமே என்றார்....

உண்மை தான் என்றோம்...

இன்றைய சமூகமும் இப்படித்தான் உள்ளது.

ரயில் வரும் என்று தெரிந்து தவறு செய்யும் குழந்தைகள் காப்பற்றபடுகிறது

ரயில் வராத இடத்தில் யாருக்கும் தொந்தரவு தராமல் தவறே செய்யாத குழந்தை தண்டனை பெறுகிறது

இன்றைய சூழலில் நம் வாழ்கையும், நம் நாடும் இப்படி தான் இருக்கிறது என்று அழகாக சொல்லி முடித்தார்...

"Fault makers are majority, even they are protected in most situations"

இன்றைய நிலை....

"நல்லதையே தனியாக செய்பவன் தண்டிக்கப்படுகிறான்...

தவறையே கூட்டமாக செய்பவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள்"

படித்ததில் பிடித்ததால் பகிர்கிறேன்...