Thursday, 6 August 2020

life: இவ்வளவு தான் வாழ்க்கையா

💮 *உலகப்பேரழகி  கிளியோபாட்ராவின்  கல்லறை  வாசகம்*்.  

"உலகத்திலேயே அழகானப் பிணம்   இங்கே  உறங்கிக்கொண்டு இருக்கிறது. நல்ல  வேளை  இவள்  பிணமானாள்,  இல்லாவிட்டால்   இந்தக் கல்லறைக்குள்  ரோமாபுரி  சாம்ராஜ்யமே  பிணமாகியிருக்கும்."

 💮 *மகா அலெக்சாண்டரின்  கல்லறை  வாசகங்கள்*.  

"இந்த  உலகம்  முழுவதுமே  போதாது  என்று  சொன்னவனுக்கு , இந்தக் கல்லறைக் குழி  போதுமானதாக ஆகிவிட்டது."

💮 *ஒரு  தொழிலாளியின் கல்லறை வாசகம்*்.

"இங்கே  புதை குழியில் கூட  இவன்  கறையான்களால்  சுரண்டப்படுகிறான்."

💮 *அரசியல்வாதியின்  கல்லறையில்*, 

"தயவு செய்து  இங்கே  கை தட்டி  விடாதீர்கள்,  இவன்  எழுந்து விடக்கூடாது."

💮 *ஒரு  விலை மகளின்  கல்லறை  வாசகம்.*  

"இங்கு  தான்  இவள்  தனியாகத் தூங்குகிறாள், தொந்தரவு  செய்யாதீர்கள், பாவம்  இனி  வர முடியாது  இவளால்."

இவ்வளவு  தானா வாழ்க்கை❓

ஆம்   அதிலென்ன  சந்தேகம். 

ஆனானப்பட்டவர்களின்  ஆட்டமெல்லாம் அடங்கிப்போனது அடையாளம் தெரியாமல். உலகையே  நடுங்க  வைத்த  *ஹிட்லர்*  தன்  சாவைக்கண்டு  நடுங்கி  ஒடுங்கி  அடங்கிப்போனான்.

அவனோடு  கூட்டு சேர்ந்து  சர்வாதிகார ஆட்டம்  போட்ட   *முசோலினி*   இறந்த போது  ரஷ்ய  தலை நகரில்  முசோலினியின் பிணத்தை  தலைகீழாக தொங்க  விட்டு   ஒரு வாரம்  வரை  அத்தனை பொதுமக்களும்   தங்களது  செருப்பால் அந்தப் பிணத்தை அடித்து  தங்கள் மனக்குமுறலை  தீர்த்துக் கொண்டார்கள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆணவக்காரர்கள் அடங்கிப்போன கதைகளை.

நாம்  *எதை*  ஆதாரமாக வைத்து ஆணவப்படுகிறோம்❓ 

நமது  *பதவியா?* 
நாம் சேர்த்த சொத்து சுகங்களா?
நமது  *படிப்பா?*
நமது  *வீடா?*
நம்  முன்னோர்களின் *ஆஸ்தியா?*  
நமது  *அறிவா?*   
நமது  *பிள்ளைகளா?* 
எது  நம்மைக் காப்பாற்றப் போகிறது?
 
*ரத்தம்  சுருங்கி, நமது சுற்றமெல்லாம் ஒதுங்கிய பின்   எதுவுமே  நம்மை காப்பாற்றப் போவதில்லை*.

*பசித்தவனுக்கு  உணவு கொடுத்து, உடை இல்லாதவனுக்கு  உடை கொடுத்து,  எல்லாரையும் நேசித்து , மனத் தூய்மையான வாழ்க்கையை வாழுபவர்கள் மட்டுமே என்றென்றும் வாழ்பவர்கள்.*

கேவலம் அற்ப சுகங்களுக்காக தமது வாழ்க்கையை பாழாக்கிக்கொள்ளும் ஆண்களும், பெண்களும் பெருகி வரும்  சமூகத்தில் வாழும்  நாம்   எச்சரிக்கையோடு  நம்மை  காத்துக்கொள்ள  வேண்டும்.

*ஒரே முறை வாழப்போகிறோம* , எதை விதைக்கிறோமோ அதைத்தான் பல நூறு மடங்காக அறுவடை செய்யப்போகிறோம். 

நல்ல செயல்களை, எண்ணங்களை விதைப்போம். அளவில்லா மகிழ்ச்சியோடு அறுவடை  செய்வோம்   நன்மைகளை  ஆயிர மடங்காக...

Monday, 27 July 2020

old is gold: 1955-1988 born generation golden memories of TamilNadu human being

*1955-1988 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள் நம்மைப் பற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..!*

​💯% தனி படுக்கையில் அல்ல, அம்மா அப்பா கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்​

​💯% எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.​

​💯% கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.​

​💯% புத்தகங்களை சுமக்கும் பொதி மாடுகளாக இருந்ததில்லை.​

​💯% சைக்கிள் ஓட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஓட்டி விளையாண்டது இல்லை.​

​💯% பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான். ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்த்ததில்லை.​

​💯% நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை.​

​💯% தாகம் எடுத்தால் தெரு குழாய்களில் தண்ணிர் குடிப்போம். ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.​

​💯% ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.​

​💯% அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதமும் சாப்பிட்டு வந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.​

​💯% காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.​

​💯% சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.​

​💯% உடல் வலிமை பெற ஊட்டசத்து பானங்கள் அருந்தியதில்லை. மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.​

​💯% எங்களுக்கு வேண்டிய விளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்​

​💯% எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல. ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுயவர்கள் அல்லர். அவர்கள் தேடியதும் கொடுத்ததும் அன்பை மட்டுமே; பொருட்களை அல்ல​

​💯% அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில் தான் நாங்கள் இருந்து வந்தோம். அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது. அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.​

​💯% உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார். டாக்டரை தேடி ஒடியதில்லை​

​💯% எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லை. உள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.​

​💯% எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளே ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம், பெர்சனல் கம்ப்யூட்டர், நெட், சாட் போன்றவைகள் இல்லை. ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்​

​💯% வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.​

​💯% எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர். இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.​

​💯% உறவுகள் அருகில் இருந்தது. உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்ததில்லை​

​💯% இந்த மாதிரி காலகட்டத்தில் பிறந்து வளர்ந்து வந்த நாங்கள் . . . *அதிர்ஷ்டசாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள்.*


Thursday, 30 January 2020

How to stay motivated ?

In the jungle which animal is the : 
Biggest ....  Elephant ?
Tallest ....... Giraffe.? 
Wisest ......  Fox ?
Fastest ...... Cheetahs ? 

Yet, the Lion is the KING of the jungle even without ANY of these qualities.!!

Why??

Because...

The Lion is courageous, bold, walks with confidence, dares anything and is never afraid. 

The Lion believes he is unstoppable. 

The Lion is a risk taker. 

The Lion believes any animal is food for him. 

The Lion believes any opportunity is worth giving a try and never lets it slip from his hands. 

So...

- What is it that we get to learn from the Lion ??

• You don't need to be the fastest.
• You don't need to be the wisest.
• You don't need to be the smartest.
• You don't need to be the most brilliant.
• All you need is courage
• All you need is the will to try
• All you need is the faith to believe it is possible.
• All you need is to believe in yourself, that you can do it.!! 

It's TIME to bring out the  Lion in you..!!
*-Swami Vivekanand*