Monday, 31 July 2017

Life: vazhilkaiku alagana varigal, sweet lines for life

*அழகான வரிகள்*.

1, அறிமுகம் இல்லாதவர்களின் பார்வையில்..
நாம்
எல்லோரும் *சாதாரண மனிதர்கள்*

2,பொறாமைக்காரரின் பார்வையில்..
நாம்
அனைவரும் *அகந்தையாளர்கள்*

3,புரிந்து கொண்டோரின் பார்வையில்..
நாம் *அற்புதமானவர்கள்*

4,நேசிப்போரின் பார்வையில்..
நாம் *தனிச்சிறப்பானவர்கள்*
5,காழ்ப்புனர்ச்சி கொண்டவர்களின் பார்வையில்..
நாம் *கெட்டவர்கள்*

நம்மை பற்றி ஒவ்வொருவருக்கும் 
ஒரு தனியான பார்வை உண்டு.

ஆதலால் -
பிறரிடம் உங்கள் பிம்பத்தை அழகாக்கிக் காட்ட *சிரமப்படாதீர்கள்*

மனிதர்களை திருப்திப்படுத்துதல் என்பது எட்ட முடியாத இலக்கு...

*எட்ட முடியாததை விட்டு விடுங்கள்!*
*அடைய வேண்டியதை விட்டு விடாதீர்கள்.......👍🏻👍🏻

Saturday, 29 July 2017

God: yean tharmanai veda karnan periya kodaiyali, why karnan greater than tharman

அர்ஜுனன் ஒருநாள்.. கிருஷ்ணரிடம் கேட்டான்.....?

#தருமரை விட #கர்ணனையே பெரிய கொடையாளி என்று மக்கள் ஏன் கருதுகிறார்கள்?

இரண்டு பேருமே எதையும் இல்லை என்று சொல்லாமல் கொடுப்பவர்கள்தானே...?

கர்ணனுக்கு மட்டும் ஏன் அதிக புகழ் ?”

சரி, என்னுடன் வா, காட்டுகிறேன் என்று கூறி அர்ஜுனனை அழைத்துச் சென்றார் கிருஷ்ணன்.

இருவரும் பிராமணர்களைப் போல வேடமிட்டுக்கொண்டு தருமரின் அவைக்குச் சென்றார்கள்.

யாகம் நடத்த சந்தனக் கட்டைகள் வேண்டும் என்றார்கள்.

மன்னர் தருமர் உடனே சந்தன மரங்களை வெட்டிக் கொண்டு வருமாறு தன் ஆட்களை நாடு முழுவதும் அனுப்பினார்.

ஆனால் அப்போது மழைக்காலம். கொண்டு வந்த மரங்கள் எல்லாம் ஈரமாகி இருந்தன.

அவற்றைக்கொண்டு யாகம் நடத்த முடியாது.

இருவரும் கர்ணனிடம் சென்று அதே கோரிக்கையை வைத்தார்கள்.

கர்ணன் யோசித்தான். “அடாடா... இது மழைக்காலம். இந்த மழைக்காலத்தில் காய்ந்த கட்டைகள் கிடைக்காது. அதனால் என்ன... கொஞ்சம் பொறுங்கள்” என்றான்.

கோடரியை எடுத்து வந்தான்.

மாளிகையின் கதவுகளும் சன்னல்களும் சந்தன மரத்தால் செய்யப்பட்டவை.

கர்ணன் அவற்றை வெட்டி எடுத்துக் கொடுத்தான்.

இருவரும் திரும்பி வரும்போது கிருஷ்ணர் கேட்டார்.

“இப்போது புரிகிறதா அர்ஜுனா... தருமரிடம் கதவையும் ஜன்னல்களையும் உடைத்துத் தாருங்கள் என்று கேட்டிருந்தால் அவரும் உடனே தந்திருப்பார்தான்.

ஆனா் அவர் தானாகவே அவ்வாறு சிந்திக்கவில்லை.

ஆனால் கர்ணன்...

நாம் கேட்கவே இல்லை. அவனாகவே யோசித்துச் செய்தான்.

யுதிஷ்டிரர் கொடுப்பது தர்மம் .......

கர்ணன் கொடுப்பது விருப்பம் ......

எந்த வேலையையும் விருப்பத்துடன் செய்தால் அது போற்றப்படும் செயலாகும்”

இதிலிருந்து தெரிவது என்ன?

கடமைக்காகவோ, நிர்ப்பந்தமோ, தேவையோ, எதுவாக இருந்தாலும் செய்வதை விருப்பத்துடன் செய்யுங்கள். வெற்றி பெறுவீர்கள்.....

Life: happiness love, santhosam

If u want . . .
Happiness in life ;
Never be , , ,
*" Owner "* of love . . .
Always be , , ,
*"  Donor  "* of love . . .

Friday, 28 July 2017

Photo: health, advertisement for profit not for peoples health, velambaram veyabarathuku makkal nanmaiku alla

Photo: think, computer vs human since 1980

Photo: vegetable for health, udal nalatherku kaikari

Photo: health seruneeragam, veg fpr kidney

Motivation: 12 golden words

Nice collection!! Please read -

Twelve golden sentences :

1 Heavy rains remind us of challenges in life. Never ask for a lighter rain, just pray for a better umbrella. That is Attitude.

2 When flood comes, fish eats ants and when flood recedes, ants eat fish. Only time matters. Just hold on. God gives opportunity to every one.

3 In a theatre when drama plays, you opt for front seats. When film is screened, you opt for rear seats. Your position in life is only relative. Not absolute.

4 For making soap, oil is required. But to clean oil, soap is required. This is the irony of life.

5 Life is not about finding the right person. But creating the right relationship.

6 It's not how we care in the beginning. But how much we care till the end.

7 Every problem has (N+1) solutions: where N is the number of solutions that you have tried and 1 is that you have not tried.

8 When you are in problem, don't think it's the End. It is only a Bend in life.

9 Difference between Man and God is God gives, gives and forgives. Man gets, gets and forgets.

10 Only two category of people are happy in life-The Mad and the Child. Be Mad to achieve a goal. Be a Child to enjoy what you achieved.

11 Never play with the feelings of others. You may win. But loose the person for lifetime.

12 There is NO Escalator to success. ONLY STEPS!!!

Thursday, 27 July 2017

Joke : class room

Teacher : யார் அடுத்த
கேள்விக்கு பதில்
சொல்றாங்களோ அவங்க
வீட்டுக்கு போயிரலாம்..
(உடனே ஒரு பையன் அவன் bag ah
தூக்கி வெளிய போட்டான்)

Teacher (கோபமா) : எவன்டா bag
ahதூக்கி வெளிய போட்டது..

Student : நான் தான் miss..
பதில் சொல்லிட்டேன்
கிளம்புறேன்..

நாங்க எப்போதும் இப்படித்தான்.....

Wednesday, 19 July 2017

Motivation, god: ellarukum kastam undum, kastam enbathu nature

!!*எல்லோருக்கும்  கஷ்டம்_உண்டு*!!

ஓர் ஊரில் ஒரு வியாபாரி இருந்தார். அவர் கடவுள் பக்தி உடையவர்.

ஜவுளி மூட்டையைச் சுமந்துகொண்டு கிராமப்புறங்களுக்கு நடந்தே சென்று வியாபாரம் செய்துவந்தார்.
வீட்டில் பிள்ளைகள் சரியாகப் படிக்காததால், அவர் மிகவும் வேதனை அடைவார்.

தெய்வம் நமக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டங்கள் கொடுக்கிறது? என்று நினைத்து, தெய்வத்திடம் போய் முறையிடுவார்.

அப்போது ஓர் எண்ணம் தோன்றியது.

தெய்வத்திடம் தனிமையில் நம் குறைகளை எடுத்துக் கூறினால் என்ன? என்று நினைத்தார்.

அதன்படி, ஒரு நாள் பூஜையெல்லாம் முடிந்து கோயில் மூடப்படும்போது கோயிலுக்குள்ளேயே மறைந்துகொண்டார்.

அவருக்கு அசதியாக இருந்ததால், அங்கேயே சிறிது நேரத்தில் உறங்கிவிட்டார். நடு இரவில் ஏதோபேச்சுக் குரல் கேட்டது. விழித்துப் பார்த்தார்.

அப்போது படிக்கட்டும் தூணும் பேசிக்கொண்டிருந்தன.

அவர் அதை உற்றுக் கவனித்தார்.

அப்போது படிக்கட்டு தூணிடம் நாம் எல்லோரும் ஒரே பாறையாகத்தான் இருந்தோம். அங்கு வந்த கொத்தனாரும் சிற்பியும் பாறையைத்தட்டிப் பார்த்து, ‘இந்தக் கல்லைப் படிக்கட்டாகவும் இந்தக் கல்லைத் தூணாகவும் இந்தக் கல்லை சிலையாகவும் வடிக்கலாம் என்று கூறினார்கள். அதன்படி நம்மை உருவாக்கினார்கள்.

இப்போது நீ பரவாயில்லை, தூணாக நிற்கிறாய்.

நானோ படிக்கட்டாக மாறினேன் என்னை கோயிலுக்கு வருவோர், போவோர் எல்லோரும் மிதித்துச் செல்கின்றனர். என்னால் வலியைத் தாங்க முடியவில்லை... என்று கூறியது.

அதற்குத் தூண், படிக்கட்டிடம் உனக்காவது பரவாயில்லை, மிதித்துவிட்டுச் சென்றுவிடுகின்றனர்.

ஆனால், நானோ அப்படியல்ல.. எப்போதுமே இந்தக் கோபுரத்தைச் சுமந்துகொண்டு அப்படியே நின்றுகொண்டிருக்கிறேன்.

நம்முடன் வந்து சிலையாக இருக்கிறதே, அதற்கு தினசரி பால் அபிஷேகம், சந்தன அபிஷேகம், நெய் அபிஷேகம் என்று பலவிதமான அபிஷேகங்கள் செய்கிறார்கள். சிலை சந்தோஷமாக இருக்கிறது! என்று தூண் கூறியது.

உடனே எங்கோ இருந்து மெதுவாக ஓர் அழுகைச் சத்தம் கேட் டது.

அது சிலையின் குரல்தான்.

உடனே படிக்கட்டும் தூணும் சிலையைப் பார்த்து, நீதான் சந்தோஷமாக இருக்கிறாயே.. ஏன் அழுகிறாய்? என்று கேட்டன.

உடனே சிலை, படிக்கட்டைப் பார்த்து உன்னை மிதித்துவிட்டுச் சென்றுவிடுகிறார்கள்.

தூணோ, கோபுரத் தைத் தாங்கிக் கொண்டு நின்றுவிடுகிறது. ஆனால், என் நிலை...

ஒவ்வொருவரும் வந்து ஒரு அபிஷேகம் செய்துவிட்டு, அவரவர் குறைகளை எல்லாம் சொல்லி என்முன் கண்ணீர் வடிக்கும்போது, ‘ஏன்தான் நாம் சிலையாக வந்தோமோ... மக்களுக்கு இவ்வளவு கஷ்டங்கள் இருக்கிறதா? என்று தினமும் நான் வேதனையடைகிறேன்.

இதையெல்லாம் கேட்கக் கேட்க என்னால் தாங்க முடியவில்லை’’ என்று கூறியது.

இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த ஜவுளி வியாபாரிக்கு அப் போது ஓர் உண்மை புரிந்தது.

கஷ்டங்கள் என்பது இயற்கை. அதை எதிர்நீச்சல் போட்டு முன்னேறுவதுதான் வாழ்க்கை என்பதே அது.

Saturday, 15 July 2017

Tamil perumai, amma &appa eluthu velakam

ஹிந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள். . .

தங்களது பெயரில் ஹிந்தி எனும் வார்த்தையை இணைத்துக்கொள்ள முன்வரவில்லை.

👉 *முடியவும் முடியாது.*

*கன்னடா*------முடியாது.

*தெலுங்கு*----- முடியாது.

*மலையாளம்*------முடியாது.

*ஏனைய மொழிகள்*----முடியாது.

ஏனென்றால் மற்ற மொழிகள் யாவும் மொழியாக மட்டுமே வரையறுக்கப்பட்டது.

ஆனால் . . .

தமிழில்.....

👇
👇

தமிழ்,
தமிழ்ச்செல்வி,
தமிழ்ச்செல்வன்,
தமிழரசன்,
தமிழ்க்கதிர்,
தமிழ்க்கனல்,
தமிழ்க்கிழான்,
தமிழ்ச்சித்தன்,
தமிழ்மணி,
தமிழ்மாறன்,
தமிழ்முடி,
தமிழ்வென்றி,
தமிழ்மல்லன்,
தமிழ்வேலன்,
தமிழ்த்தென்றல்,
தமிழழகன்,
தமிழ்த்தும்பி,
தமிழ்த்தம்பி,
தமிழ்த்தொண்டன்,
தமிழ்த்தேறல்,
தமிழ்மறை,
தமிழ்மறையான்,
தமிழ்நாவன்,
தமிழ்நாடன்,
தமிழ்நிலவன்,
தமிழ்நெஞ்சன்,
தமிழ்நேயன்,
தமிழ்ப்பித்தன்,
தமிழ்வண்ணன்,
தமிழ்ப்புனல்,
தமிழ்எழிலன்,
தமிழ்நம்பி,
தமிழ்த்தேவன்,
தமிழ்மகன்,
தமிழ்முதல்வன்,
தமிழ்முகிலன்,
தமிழ் வேந்தன்,
தமிழ் கொடி.

என்று தமிழோடு...
தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும்!!!

தமிழன் மட்டுமே,
தமிழை மொழி மட்டுமல்லாது உயிராக நேசிக்கிறான்!!

அனைவருக்கும் பகிருங்கள் .

*​தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா...​*

பெத்தவங்கள ஏன் ..............???

*"அம்மா"*

*"அப்பா"* ன்னு கூப்பிட்றோம்..!!

எப்பவாவது யோசிச்சிருக்கீங்களா.?

அந்த வார்த்தைக்கும் நமக்கும் என்ன தொடர்பு..?

*அந்த வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் என்ன...?*

*அ – உயிரெழுத்து.*

*ம் – மெய்யெழுத்து.*

*மா – உயிர் மெய்யெழுத்து.*

*அ – உயிரெழுத்து.*

*ப் – மெய்யெழுத்து.*

*பா – உயிர் மெய்யெழுத்து.*

தன் குழந்தைக்கு உயிரை கொடுப்பவர் தந்தை.

தாயானவள் தன் கருவறையில் அந்த உயிருக்கு மெய்
(கண், காது, மூக்கு, உடல் உறுப்புகள்) கொடுப்பவள் தாய். .

இந்த *உயிரும் , மெய்யும்* கலந்து உயிர் மெய்யாக வெளிப்படுவது குழந்தை.

*எந்த மொழியிலும் அம்மா, அப்பாவுக்கு இந்த அர்த்தங்கள் கிடையாது.*

*நமது "தமிழ்" மொழியில் தான் இத்துனை அற்புதங்கள் உள்ளது..!!*

*_"மம்மி -என்பது பதப்படுத்தப்பட்ட பிணம்..."_*

*படித்தேன் பிடித்தது பகிர்கிறேன்*

Thursday, 13 July 2017

God: yaruku vethe, epadi mudiyum, - is possible to change fate

யாருக்கு விதி?!!
எங்கே எப்படி முடியும்!!!

📮இந்திரன்மனைவி இந்திராணி ஒரு கிளியை மிகவும் பிரியமாகவளர்த்துவந்தாள்.

ஒருநாள் அந்த கிளி நோய்வாய்ப்பட்டுவிட்டது.

அதை பரிசோதித்த மருத்துவர்
இனி அது பிழைக்காது என்று கூறிவிட்டார்.

உடனே தன் கணவனை அழைத்த இந்திராணி,
இந்த கிளியை எப்படியாவதுக்காப்பாற்றுங்கள்.
கிளி இறந்துவிட்டால் நானும் இறந்துவிடுவேன் என்றாள்.

இந்திரன்,
கவலைப்படாதே இந்திராணி...நான் உடனே பிரம்மாவிடம்சென்று முறையிடுகிறேன்...
ஒவ்வொருவரின் தலையெழுத்தையும் எழுதுபவர் அவர்தானே?

அவரிடம்சென்று கிளியின் தலையெழுத்தை மாற்றியெழுதிவிடுவோம் என்று சொல்லிவிட்டு
பிரம்மாவிடம் சென்று விஷயத்தை கூறினான்..

விஷயத்தைக்கேட்ட பிரம்மா ,

இந்திரா.... படைப்பது மட்டுமே என்வேலை.

உயிர்களை காப்பது சாட்சாத் மஹாவிஷ்ணுவின் தொழில்.

நாம் அவரிடம்சென்று உதவிகேட்போம்...வா ...நானும் உன்னுடன் வருகிறேன் என்று இந்திரனை அழைத்துக்கொண்டு
மஹாவிஷ்ணுவிடம்சென்று விஷயத்தை தெரிவித்தார் பிரம்மா.

மஹாவிஷ்ணுவோ, உயிர்களை காப்பது நான்தான்.

ஆனால் உன் கிளி இறக்குந்தறுவாயிலிருக்கிறது.

அழிக்கும்தொழிலை மேற்கொண்ட சிவன் தான் அதைக்காப்பாற்ற வேண்டும்.

வாருங்கள் நானும் உங்களுடன்வந்து சிவனிடம் பேசுகிறேன் என்று கிளம்பினார் விஷ்ணு.

விபரங்களைக்கேட்ட சிவன் , அழிக்கும் தொழில் என்னுடையதுதான்.

உயிர்களையெடுக்கும்பொறுப்பை நான்
எமதர்மராஜனிடம் ஒப்படைத்துள்ளேன்.

வாருங்கள் ....நாம் அனைவரும்சென்று எமதர்மனிடம்கூறி அந்த கிளியின் உயிரை எடுக்கவேண்டாம் என்று சொல்லிவிடுவோம் என்றுசொல்லி அவர்களை அழைத்துக்கொண்டு எமலோகம் செல்கிறார் சிவன்.

தன்னுடைய அவைக்கு சிவன் , மஹாவிஷ்ணு , பிரம்மா , இந்திரன் ஆகிய நால்வரும் வருவதைக்கண்ட எமதர்மன் உடனே எழுந்து ஓடிவந்து வரவேற்கிறார்.

விஷயம் முழுவதையும்கேட்ட அவர் ,
ஒவ்வொரு உயிரையும் எந்தநேரத்தில் ,
எந்தசூழ்நிலையில் ,
என்னகார‌ணத்தால் எடுக்கவேண்டும் என்ற காரணத்தை ஒரு ஓலையில் எழுதி ஒரு பெரிய அறையில் தொங்கவிட்டுவிடுவோம்.

அந்த ஓலை அறுந்துவிழுந்துவிட்டால், அவரின் ஆயுள் முடிந்துவிடும்.

வாருங்கள் அந்த அறைக்குச்சென்று
கிளியின் ஆயுள் ஓலை எது என்று பார்த்து , அதை மாற்றி எழுதிவிடுவோம் என்று அவர்களை அழைத்துச்செல்கிறார்.

இப்படியாக
இந்திரன் ,பிரம்மா ,விஷ்ணு , சிவன் , எம்தர்மன் ஆகிய ஐவரும் அந்த அறைக்குச்சென்றனர்.

அவர்கள் உள்ளே நுழைந்தவுடன் ஒரு ஓலை அறுந்து விழுகிறது.

உடனே அவர்கள் அவசரமாகச்சென்று அந்த ஓலையை எடுத்து பார்க்கின்றனர்.

அது அந்த கிளியின் ஆயுள் ஓலை.

அவசரமாக அதை படித்துப்பார்க்கின்றனர்....

அதில்,,,

இந்திரன் , பிரம்மா , விஷ்ணு , சிவன் , எம‌தர்மன் ஆகிய ஐவரும் எப்போது ஒன்றாக இந்த அறைக்குள் நுழைகிறார்களோ
அப்போது இந்த கிளி இறந்துவிடும்.. என்று எழுதப்பட்டிருந்தது.

இதுதான் விதி!!

விதியை மாற்றுவது என்பது முடியாது என்பதே கதை?!

யாருக்கு விதி?!!
எங்கே எப்படி முடியும்!!!
என்பது எழுதினவனுக்கே
தெரியாது என்பது தான் உண்மை?! 
வாழும் காலம் நிரந்தரம் இல்லை?                   வாழும் காலத்திலாவது அனைவரிடமும் அன்பாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள்!

Motivation: nee neeyaga eruku = you are you, dont change

*நீ . . .நீயாக இரு !*

தங்கம் விலை அதிகம்தான் . . .
தகரம் மலிவு தான் . . .
ஆனால் தகரத்தைக் கொண்டு
செய்யவேண்டியதை
தங்கம் கொண்டு செய்ய முடியாது . . .
அதனால் தகரம் மட்டமில்லை . . .
தங்கமும் உயர்ந்ததில்லை . . .
*எனவே நீ . . .நீயாக இரு !*

கங்கை நீர் புனிதம் தான் . . .
அதனால் கிணற்று நீர் வீண் என்று
அர்த்தமில்லை . . .
தாகத்தில் தவிப்பவருக்கு
கங்கையாயிருந்தால் என்ன ?
கிணறாகயிருந்தால் என்ன ?
*நீ . . .நீயாக இரு !*

காகம் மயில் போல் அழகில்லை தான் . . .
ஆனாலும் படையல் என்னவோ காக்கைக்குத்தான் !
*நீ . . .நீயாக இரு !*

நாய்க்கு சிங்கம் போல் வீரமில்லை தான் . . .
ஆனாலும் நன்றி என்னவோ நாய்க்குத் தான் !
*நீ . . .நீயாக இரு !*

பட்டு போல் பருத்தி இல்லை தான் . . .
ஆனாலும் வெயிலுக்கு சுகமென்னவோ பருத்திதான் !
*நீ . . .நீயாக இரு !*

ஆகாசம் போல் பூமி இல்லைதான் . . .
ஆனாலும் தாங்குவதற்கு இருப்பது பூமிதான் !
*நீ . . .நீயாக இரு !*

நேற்று போல் இன்றில்லை . . .
இன்று போல் நாளையில்லை . . .
அதனால் ஒவ்வொன்றும் அற்புதம்தான் !
*எனவே நீ . . .நீயாக இரு !*

அதில் வெட்கப்பட ஒன்றுமில்லை !
அதில் வருத்தப்பட ஒன்றுமில்லை !
அதில் நொந்துபோக ஒன்றுமில்லை !
அதில் பாபம் ஏதுமில்லை !
அதில் அசிங்கம் ஒன்றுமில்லை !
உன்னை உரசிப் பார் . . .
உன்னை சரி செய்து கொண்டே வா . . .
*நீ . . .நீயாக இரு !*

உலகம் ஒரு நாள்,
உன்னைப் போல் வாழ ஆசைப்படும் ! ! !
*நீ . . .நீயாக இரு !*

உலகம் ஒரு நாள்
உன்னை உதாரணமாகக் கொள்ளும் ! ! !
*நீ . . .நீயாக இரு !*

உலகம் ஒரு நாள்,
உன்னைப் பாடமாக ஏற்கும் ! ! !
*நீ . . .நீயாக இரு !*

உலகம் ஒரு நாள்,
உன் வழி நடக்கும் ! ! !
*நீ . . .நீயாக இரு !*

அடுத்தவனுக்காக மாறி உனக்காக உள்ளோரை இழக்காதே ! ! !
*நீ . . .நீயாக இரு !*
*நீ . . .நீநீயாகவே இரு !*

Wednesday, 12 July 2017

Motivation: man life calculation. Manetha vazhkai kanaku

சில வித்தியாசமான கணக்குகள்....

கூட்டல்:
மனிதன்+தன்னம்பிக்கை = வெற்றி
மனிதன்+கவலை = கண்ணீர்
மனிதன்+ஆனந்தம் = புன்னகை
மனிதன்+இயலாமை = கோபம்
மனிதன்+அன்பு = காதல்
மனிதன்+ஆசை=காமம்

கழித்தல்:

மனிதன் - தன்னம்பிக்கை= தோல்வி
மனிதன் - கவலை = உற்சாகம்
மனிதன் - ஆனந்தம் = சோம்பல்
மனிதன் - இயலாமை = முயற்சி
மனிதன் - அன்பு = குரோதம்
மனிதன் - ஆசை = அமைதி

பெருக்கல்:

மனிதன் × தன்னம்பிக்கை = சாதனை
மனிதன் × கவலை = தற்கொலை
மனிதன் × ஆனந்தம் = ஆயுள் விருத்தி
மனிதன் × இயலாமை = அவதி
மனிதன் × அன்பு = மனிதாபிமானம்
மனிதன் × ஆசை = வக்கிரம்

நன்றி: கவிஞர் பா.விஜய் அவர்களின் வானவில் பூங்கா புத்தகம்.

Joke: why ladies have short hair. Pengaluku yean mudi kameya eruku

பாட்டி : ஏன் டா தம்பீ ...

ஆண்களுக்கு தலைமுடி கொஞ்சமா வளருதே  பெண்களுக்கு மட்டும் ஏன்டா
தலைமுடி அதிகமா வளருது ....

நான்: பாட்டி ....!செடி யா இருந்தாலும் சரி..
முடி யா இருந்தாலும் சரி..
களிமண் எங்கே அதிகமாக இருக்கோ
அங்கே தான் வளரும் ன்னு சொன்னேன்..
துப்பிட்டு போறா கிழடு..
ஏங்க தப்பாவா சொன்னேன்..???
.😳😳😳😳😜

Tuesday, 11 July 2017

Relation: mothers anbu, mothers love

தந்தை இறந்த பின் தன் தாயை கவனிக்க முடியாமல் முதியவர் இல்லத்தில் சேர்த்து விட்டார் மகன் .

மனைவியும் வேலைக்கு போவதால் தன் தாயை வீட்டில் கவனிக்க யாருமில்லை என்ற காரணத்திற்காக முதியவர் இல்லத்தில் சேர்த்து விட்டார்.

மாதத்திற்கு ஒரு முறை தன் தாயை அங்கு சென்று சந்தித்து வந்தார்.

வருடங்கள் கடந்தன.

ஒருநாள் அவருடைய தாய் ரொம்பவும் முடியாமல் இருப்பதாக தகவல் வந்தது.

மகனும் உடனடியாக தன் தாயை சந்திக்கச் சென்றார்.

தாய் சாகும் தருவாயில் இருந்தார்கள்.

“உங்களுக்கு ஏதாவது வேண்டுமா?” என மகன் கேட்டார். “

இந்த முதியவர் இல்லத்தில் மின் விசிறிகள் எதுவும் இல்லை.

காற்று இல்லாமலும், கொசுக் கடித்தும் நிறைய நாட்கள் தூங்காமல் இருந்திருக்கிறேன்.

இங்கு தரும் கெட்டுப் போன சாப்பாட்டை சாப்பிட முடியாமல் பல நாட்கள் சாப்பிடாமல் தூங்கியிருக்கிறேன்.
எனவே இந்த இல்லத்திற்கு சில மின் விசிறிகளும் , சாப்பாட்டை கெடாமல் பாதுகாத்து வைத்திருக்க ஒரு குளிர்சாதனப் பெட்டியும் வாங்கிக்கொடுப்பாயா?” என மெல்லிய குரலில் தாய் கேட்டார்.

மகன் ஆச்சரியப்பட்டான்.

“பல வருடங்களாக நான் உங்களை பார்க்க வருகிறேன்.

ஒருநாள் கூட இப்படி ஒரு குறையை சொல்லவில்லை.

இப்போது மட்டும் ஏன் இதை கேட்கிறீர்கள்?” என கேட்ட மகனின் முகத்தை மெல்ல ஏறெடுத்துப் பார்த்தார்.

“மகனே இங்கு மின் விசிறி இல்லாமல் கொசுக்கடியை தாங்கிக் கொண்டு உறங்குவதற்கு நான் பழகிக்கொண்டேன்.

இங்குள்ள பசியையும், துன்பங்களையும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியும்.

ஆனால் உனது குழந்தைகள் உன்னை இந்த இல்லத்திற்கு அனுப்பும் போது உன்னால் அவற்றை தாங்கிக்கொள்ள முடியாது என நினைத்து வருந்துகிறேன்.

அதனால் தான் இப்போது கேட்கிறேன்” என்றார்.

வாழ்க்கை-யில் காயப்படுத்தும் விஷயங்களே கற்றுக்கொடுக்கவும் செய்கின்றன. படிக்கும் போதே நெகிழ்ந்து

God: 12 pavangaluku sivanidam manipu ellai.

*இந்த 12 பாவங்களுக்கு சிவனிடம் மன்னிப்பு இல்லை.*

மனசாட்சியையும் தாண்டி நீங்கள் செய்யும் பாவத்திற்கான பதில் சிவனிடம் கிடைக்கும் என்று இந்து சமயம் கூறுகின்றது. அவ்வாறு சிவனின் கோபத்திலிருந்து தப்பிக்க முடியாத நாம் செய்யும் பாவங்கள் எவை தெரியுமா?

*பாவம் – 1*
அடுத்தவரின் மனைவியை அல்லது கணவன் மீது ஆசைப்படுவது.

*பாவம் – 2* அடுத்தவரின் பணத்திற்கு ஆசைப்பட்டு அவரின் சொத்துக்களை அபகரிக்க நினைப்பது மகா பாவத்தில் அடங்கும்.

*பாவம் – 3* உங்களின் சுய நலத்திற்காக எளியவர்களில் கனவை, வாழ்வை அழிப்பது, அவர்களின் மீது இல்லாத பழியை சுமத்துவதும் சிவனின் மூன்றாவது கண்களிலிருந்து தப்பிக்க முடியாத பாவம்.

*பாவம்- 4* ஒருவன் தொடர்ந்து தீய வழியிலே செல்வது, அல்லது சிறிதும் நன்மைகூட அடுத்தவர்களுக்கு செய்யாமலிருப்பது இரண்டுமே சிவனின் கோபத்திற்கு ஆளாகும் பாவங்கள்.

*பாவம்- 5* கர்ப்பிணிகளிடம் மிக மோசமான நடந்துகொள்வதும், அவர்களை தீய வார்த்தைகளால் திட்டுவதும், அதேபோல் மாதவிலக்கின் போது பெண்களை திட்டுவதும் பாவத்திற்கான வழிகளாகும்.

*பாவம் 6 ;* இன்னொருவரைப் பற்றி அப்படமான பொய் கூறி அவரை சீர்குலைய வைப்பதும் சிவனுடைய கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

*பாவம்-7 :* வதந்திகளையும், தேவையில்லாத விஷயங்களையும், மனதிற்கு நிம்மதியளிக்காத செய்திகளையும் எல்லாரிடம் பரப்புவது மோசமான செய்கையாகும். இதனால் சிவனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

*பாவம்- 8 :* ஒருவரின் செய்கையால மற்றொருவரின் வாழ்வு நாசமானால் அதுவும் மிகப் பெரிய பாவம். அடுத்தவரை கொலை செய்வது, அழிப்பது போன்றவைகளாகும்.

*பாவம்- 9 :* இந்து சமயம் சில உணவுகளை சாப்பிடக் கூடாது என்று சொல்லியும் அவ்ற்றை சாப்பிடுவது பாவச் செயல். உதாரணத்திற்கு தெய்வமாக பார்க்கப்படும் மாட்டை உண்பது.

*பாவம் – 10 :* வன்முறையை கையாள்வது. குழந்தைகளுக்கு எதிராகவும், பெண்களுக்கு எதிராகவும் செய்யும் வன்முறைகள் மன்னிக்கமுடியாத பாவமாகும்.

*பாவம் – 11 :* மாதா, பிதா, குரு மற்றும் வயதானவர்களை மரியாதையின்றி நடத்துவது, அவர்களை அடித்து துன்புறுத்துவது போன்றவையால் சிவனின் கோபத்திற்கு ஆளாக வேண்டிவரும்.

*பாவம்- 12 :*முறையற்ற வழியில் சொத்து சேர்ப்பது, தானமாக கொடுத்த பொருளை திரும்ப வாங்குவதும் சிவனின் பாவத்தின் கணக்கில் அடங்கும்.