Tuesday, 6 July 2021

தவறு யாரிடம் ?

*மனைவிக்கு திடீர் சந்தேகம் வந்தது !!!!*

*தன்னுடைய கணவனுக்கு காது கேட்கவில்லையோ என்று?.*

*ஆனால்... இதை கணவனிடம் நேரடியாக கேட்க அவருக்கு தயக்கம்.*

*இந்த விஷயத்தை அவரின் உறவுக்கார டாக்டருக்கு தெளிவாக விளக்கி ஒரு கடிதம் எழுதினார்....*

*டாக்டரிடம் இருந்து வந்த பதிலில்...*

*"இருபது அடி தூரத்தில் இருந்து கணவரிடம் ஏதாவது பேசிப் பாருங்கள்,...*

கணவரின் காதில் விழவில்லை எனில்....
*சற்று நெருங்கி பதினைந்து அடி தூரத்தில் இருந்துப் பேசுங்கள்.*
 
*பின் பத்து, ஐந்து இப்படி குறைத்துக் கொண்டே நெருங்கிச் சென்று பேசுங்கள்.*

*எத்தனை அடி தூரத்தில் இருந்து பேசினால் கணவருக்கு காது கேட்கவில்லை எனத் தெரிந்தால் அதற்கேற்றபடி சிகிச்சை அளிக்கலாம்" என்றிருந்தது.*

அதைக் கேட்டவுடன் மனைவிக்கு ஒரே *குஷி.*

*அடுத்த நாள் வீட்டு வாசலில் இருந்தபடியே உள்ளிருந்த கணவரிடம்...*

*இன்று மகனுக்கு பள்ளி கட்டணம் கட்டியாச்சானு கேட்டாள். பதில் எதுவும் இல்லை...*

*பின் வீட்டு வரவேற்பறையில் இருந்து அதே கேள்வியைக் கேட்டாள். அதற்கும் பதில் இல்லை,*

*ஹாலில் இருந்து கேட்டாள், சமையலறை வாசலில் இருந்தும் மீண்டும் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டாள்...*

*கணவரிடமிருந்து பதிலே இல்லை.*

போச்சு *இரண்டு ஸ்பீக்கரும் அவுட்* ஆகிவிட்டதுபோல என்று மனதில் கன்ஃபர்ம் செய்து விட்டார்.

*கடைசி வாய்ப்பாக கணவனின் காது அருகே சென்றுச் சத்தமாக....*

*"இன்னைக்கு பையனுக்கு Fees கட்டியாச்சானு?"* கேட்டாள்.

*காதில் ஏதோ குண்டு வெடித்தது போல் இருக்கவே... அவளின் கணவன் அவளை கோபமாக திரும்பிப் பார்த்து,*

*”ஏன்டீ இப்படி கத்துற, நீ வாசல் கேட்டிலிருந்து , வரவேற்பறையில் இருந்து,ஹாலில் இருந்து, சமைலறை வாசலில் இருந்து கேட்க, கேட்க நானும் கட்டியாச்சு கட்டியாச்சுனு சொல்லிக்கிட்டே இருக்கேன்,*

அது உன் காதில் விழவில்லையா?
*காதுல என்ன பஞ்சு மூட்டையா வைச்சிருக்க...?* என பொரிந்துத் தள்ளிவிட்டான்...

*மனைவி அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றாள்.*

*தவறு தன்னிடம் தானா?*


*கதையின் நீதி*

*இப்படித்தான் பலர் பிரச்சனையை நம்மிடம் வைத்துக் கொண்டு...*

*அது பிறரிடம் இருப்பதாக நினைத்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்…*

*என்ன விசித்திரம்!!!*

*இந்தப் பதிவு சிரிக்க 😁மட்டும் அல்ல, சிந்திக்கவும் கூடத்தான்🤔*
 
🌷🌷🙏🙏🙏🌷🌷

No comments:

Post a Comment