காயத்ரி மந்திர வழிபாடு
‘‘மந்திரங்களில் நான் காயத்ரி மந்திரமாக இருக்கிறேன்’’ என்று பகவத்கீதையில் கிருஷ்ண பரமாத்மா கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு காய்திரி மந்திரம் உயர்வானது. சிறப்பு வாய்ந்தது. இது மகரிஷி விஸ்வாமித்திரர் உபதேசித்த மந்திரம் என்று கூறப்படுகிறது.
ஓம் பூர்புவ ஸ்வஹ
தத் ஸ்விதூர் வரேணியம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோநஹ ப்ரசோதயாத்
- இதுதான் காயத்ரி மந்திரமாகும். இதன் பொருள் ‘‘பூ உலகம், மத்திய உலகம், மேல் உலகம் மூன்றுக்கும் சக்தியான அந்தப் பரம ஜோதி சொரூபமான சத்தியத்தை நான் தியானிக்கிறேன். அந்த பரம சக்தி ஒளி என் அறிவைத் தூண்டி என்னை உண்மையை அறிந்த நிலைக்கு உயர்த்தட்டும்’’ என்பதாகும். காயத்ரி மந்திரம் சூரியனை குறித்தே உருவாக்கப்பட்டது என்பது சிலரது வாதமாகும். காயத்ரி மந்திரம் உலகுக்கு பொதுவானது. பொதுவான பரம்பொருளை தியானிக்க சொல்வதால் எல்லாரும் இந்த மந்திரத்தை உச்சரித்து பயன் பெறலாம். காலை, மதியம், மாலை மூன்று நேரமும் காயத்ரி மந்திரம் சொல்வது நல்லது. ஆலய வழிபாடுகளின் போது ஒவ்வொரு சன்னதிலும் இறை மூர்த்தத்துக்கு ஏற்ப காயத்ரி மந்திரம் சொன்னால் உயர்ந்த பலன்கள் கிடைக்கும். காயத்ரி மந்திரத்தை நம் இஷ்டத்துக்கு உச்சரிக்கக் கூடாது. 5 இடங்களில் நிறுத்தி ஜெபிப்பதே சரியான முறையாகும்.
முதலாவது நிறுத்தம் - ஓம், இரண்டாவது நிறுத்தம் - பூர் புவஸ்வஹ. மூன்றாவது நிறுத்தம் தத் ஸ்விதூர் வரேணியம். நான்காவது நிறுத்தம் - பர்கோ தேவஸ்ய தீமஹி. ஐந்தாவது நிறுத்தம் ‘‘தியோ யோ நஹ ப்ரசோதயாத்’’ என்று இருத்தல் வேண்டும். காயத்ரி மந்திரத்தை முதலில் சொல்லத் தொடங்கும் போது 9 தடவை சொல்ல வேண்டும். அடுத்த வாரம் அதை 18 ஆக உயர்த்த வேண்டும். மூன்றாவது வாரம் 27 தடவை சொல்ல வேண்டும். இப்படி ஒன்பது ஒன்பதாக உயர்த்தி தினமும் காயத்ரி மந்திரத்தை 108 தடவை சொல்லும் வகையில் உங்களை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். காயத்ரி மந்திரம் 27 அட்சரங்களைக் கொண்டது. காயத்ரி மந்திரம் எப்படி தோன்றியது? ஒரு சமயம் ஞானம் பெற விரும்பிய முனிவர்கள் வேதக் கடலைக் கடைந்தனர். அப்போது ‘‘த்ரயீ’’ என்ற வேதசாரம் கிடைத்தது. அதை காரணமதி எனும் மத்தினால் கடைய அது காயத்ரி வடிவமாக உருவம் பெற்றது.
No comments:
Post a Comment